செவ்வாய், 24 டிசம்பர், 2013

சித்தர்களின் மூல மந்திரம்

 
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!"
அகத்தியர் மூல மந்திரம்...
ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!”
திருமூலர் மூல மந்த்திரம்...
"
ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!"
போகர் மூல மந்திரம்...
"
ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!"
கோரக்கர் மூல மந்திரம்...
ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!"
தேரையர் மூல மந்திரம்...
"
ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!"
சுந்தரானந்தர் மூல மந்திரம்...
"
ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!"
புலிப்பாணி மூல மந்திரம்...
"
ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!"
பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்...
"
ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!"
காக புசண்டர் மூல மந்திரம்...
"
ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!"
இடைக்காடர் மூல மந்திரம்...
"
ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!"
சட்டைமுனி மூல மந்திரம்...
"
ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!"
அகப்பேய் சித்தர் மூல மந்திரம்...
"
ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!"
கொங்கணவர் மூல மந்திரம்...
"
ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!"
சிவவாக்கியர் மூல மந்திரம்...
"
ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!"
உரோமரிஷி மூல மந்திரம்...
"
ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!"
குதம்பை சித்தர் மூல மந்திரம்...
"
ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!"
கருவூரார் மூல மந்திரம்...
"
ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!"

திருமூலரிடம் சீடராகவிருந்த போகர் கற்ப மூலிகைகள் என்ற தலைப்பில் கூறிய பாடலாகும்

 கற்ப மூலிகைகள்

• "கேளென்ற 1கருநெல்லி, 2 கருத்த நொச்சி
• கெடியான, 3 கருவீழி, 4 கருத்த வாழை
• காளென்ற, 5 கரிய கரிசா லையோடு
... • 6 கருப்பான நீலியோடு, 7 கரியவேலி
• கோளென்ற 8 கரூமத்தைத் 9 தீபச் சோதி
• 10 கொடு திரணச் சோதி 11 சாயா விருட்சம்
• ஏளென்ற 12 எருமை கனைச்சான் 13 ரோமவிருட்சம்
• ஏற்றமாம் 14 சுணங்க விருட்சம் 15 செந்திரா" (1)

• "செந்திராய் 16 செங்கள்ளி 17 செம்மல்லி யோடு
• 18 சிவந்தக றறாழை 19 செஞ்சித்திர மூலம்
• நந்திராய்சிவப்பப்பா மார்க்கத்தோடு
• நலமான 20 கற்பிரபி 21 கறசேம் பாகும்
• பரந்திராய் 22 கல்லுத்தா மரையி னோடு
• பாய்ந்த 23 குழல் ஆ தொண்ட 24 மகாபொற்சீந்தல்
• 25 வெந்திராய் 26 வெண்புரசு 27 வெள்ளைத் துத்தி
• மிகு 28 வெள்ளைத் தூதுவளை மிடுக்குமாமே" (2)

• "மிடுக்கான குண்டலமாம் 29 பாலை யோடு
• 30 வெள்ளை நீர்முள்ளி 31 வெண்விண்டுக் காந்தி
• கடுக்கான 32 வெண்கண்டங் காரி யோடு
• 33 கசப்பான பசலையோடு 34 மதுர வேம்பு
• கிடுக்கான 35 கிளிமூக்குத் துவரை 36 அமுகண்ணி
• கெடியான 37 பொன்மத்தை 38 மதுர கோவை
• படுக்கான 39 பொன்வன்னச் சாலியோடு
• 40 பாங்கான கருந்தும்பை 41 மதனத் தண்டே" (3)

• "தண்டொடு 42 மூவிலையாம் குருத்துமாகும்
• தணலான 43 சிவத்ததில்லை 44 கருத்த வேம்பு
• 45 இண்டோடே இவ்வகைகள் நாற்பத் தைந்தும்
• ஏற்றமாம் மலைகளிலே மிகுதி உண்டு
• பண்டோடு பாடாணம் அறுபத்து நாலும்
• பட்டுடனே கட்டுண்டு படுதீப் பற்றும்
• துண்டோடு சூதமது கட்டும் ஆகும்
• சுயம்பான உபரசங்கள் சத்தும் ஆமே." (4)

• "சத்தான மூலிகையில் சுருக்குச் சித்தி
• சாப்பிட்டால் மண்டலந்தான் சாவோ இல்லை
• மத்தான மன்மதன்போல் தேகமாகும்
• மாசற்று நரைதிரைகள் எல்லாம் மாறும்
• எத்தான வாசியெல்லாம் இறுகிப் போகும்
• ஏறலாம் சுகனத்தில் ஏற்றமாக
• அத்தான அடுக்கெல்லாம் சோதித்தேறி
• அண்டரண்டபதமெல்லாம் அறிய லாமே." (5)

இப்பாடலின் படி நாற்பத்தைந்து கற்ப மூலிகைகளினைக் கூறியுள்ளார்.மேலும் இம்மூலிகைகளினை முறையாக உட்கொள்ளுபவர்களிற்கு சாவு இல்லை என்றும் மேலும் மன்மதன் போல அழகுடைய மிடுக்கான வாலிபத்தோற்றம் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

கோரக்கர் ஜீவ சமாதி



கடலூர் மாவட்டம், உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலையில் மங்கலம்பேட்டையிலிருந்து 8 கி.மீ. பயணத்தில் உள்ளது முகாசாபரூர். இங்கு 800 வருடம் பழமைவாய்ந்த அன்னபூரணி சமேத விஸ்வநாதர் கோயில் இருக்கிறது. இவர்களை வணங்கி இங்கேயே ஜீவ சமாதியானவர் கோரக்கர் சித்தர். இத்தலம் குறித்தும் தனது ஜீவ சமாதி குறித்தும் பாடல்களால் அவர் பதிவு செய்துள்ளார். சிதிலமடைந்து கிடந்த இக்கோயில் குறித்து 26.4.2008 தேதியிட்ட தினகரன் ஆன்மிகமலர் மூலம் அறிந்த பக்தர்களால், இப்போது கும்பாபிஷேகம் கண்டு மிகச் சிறப்பாக அருள்பரப்பி நிற்கிறது ஆலயம். எளிமையான இந்த கிராமத்தில் பௌர்ணமி தோறும் கோரக்க சித்தர் வழிபாடு நடந்து வருகிறது. நியாயமான கோரிக்கைகள் யாவும் இவர் சந்நதியில் அமர்ந்து நினைக்கும் போதே நிறைவேறிவிடுகின்றன. இவரது ஜெயந்தி விழா 4.12.2012 அன்று ஆலயத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது . ஆலய தொடர்புக்கு: 9843702473. 

கோரக்கர் பற்றிய சில தகவல்கள்

.

 
பதினெண் சித்தர்களில் ஒருவராகவும், நாத் என்னும் நவநாதர்களில் (one among 9 Naths) ஒருவராகவும் விளங்குபவர் இறக்கம் நிறைந்த கோரக்க சித்தர் . இவர்  சித்தர்கள் வரிசையில் கோரக்கர் என்றும், நாத் முறையில் கோரக்நாத் என்றும் விளங்குபவர் .
நவநாதர்களில் முதன்மையாக விளங்கிய மசெந்த்ரியநாத் ஒரு பெண் மணிக்கு அளித்த சாம்பலிலிருந்து பிறந்தவர் கோரக்கன் என்று வழிவழியாக கிராம கதைகளும் உண்டு. பொதுவாக இந்த கதைகள் எல்லாம் சூட்சமான ஒரு பொருளை வைத்து இருக்கும், தெரிய வேண்டியவர்களுக்கு அதனை புலபடுத்தும்.
மசெந்த்ரியநாத் என்ற வடமொழி பெயர் பெற்ற மாமுனி அய்யனுக்கு, சித்தர்களில் மச்சமுனி என்ற பெயரும் உண்டு. கோரக்கர்  மற்றைய சித்தர்கள் போல  மருந்து, மந்தரம், ஞானம் பற்றி எழுதிய பாடல்கள்  பல உள்ளன.  அதில் சில சந்திரரேகை, ரவிமேகலை, முத்தாரம், மலைவாகடம் , நாமநீச திறவுகோல் ஆகும் . 
சித்தர்கள் பல இடத்தில் நீண்ட தவம் புரிந்து சமாதி நிலை கொண்டு, மண்ணில் புதையுண்டு மறு படியும் வேறு இடத்தில் திரிவார்கள். கோரக்க முனிவரும் அது போல கோரக்பூர், நாகை, பேரூர், கோர குண்டம்  என்று பல இடங்களில் சமாதி நிலை கொண்டு ஜீவ தளங்கள் அமைத்தவர். சந்திரரேகை என்ற கோரக்க முனி  ஏற்றிய நூலில் இருந்து கீழ் உள்ள இந்த இரண்டு பாடல்களை, இதை அழகாக விளக்கும் பொருள்பட.

Korakkar is one among the 18 siddhas and is also a nath (Goraknath) among the 9 naths that is popular in north india and nepal. It is said thro folk stories, that he was born out of ashes given by Machendranath, the chief of naths. Stories like this should not be taken literally because most of the time there is a meaning hidden for truth seekers. Machendranath also known as mamamuni is known as Machamuni in Siddhar tradition.

Siddhas after reaching a state of samadhi within, get buried in a place and move again to another places. Thereby creating various energy sanctums. Korakkar has taken samadhi in Naagai (Vadakupoigai nallur), Gorakpur, perur, kolli, ..etc, The two songs taken out of korakkar's Chandiraregai explain this clearly
"புகன்றிடுவேன் போகரவர் பெருமை தன்னை
     பூவுலகில் யாவர்களும் பொருந்தி மேவ
  அகம்மகிழ போகநாதர் பழனி தன்னில்
    அடங்கிடும்முன் பாகத்தன் வரலாறு முற்றும்
 இகமரிய செனனசா கரமும் செப்பி
    என்னைஅழைத்து உரகை எனும் பதிக்கே கென்றார்   
 தகைமையுற சித்தரையான் அடக்கம் செய்து
    தட்டாமல் உரகையுற்று பார்த்திடேனே

பாத்திருந்த சித்தர்களை பார்க்க வைத்தே
   பக்குவமாய் போகரவர் தயங்கி டாமல்
சீர்நிறைஎன் போலவரை எய்து போட்டு
  சிதறாமல் உரகையினில் என்னை கண்டார்
போர்விளங்க புதுமையுடன் எனை அழைத்து
  பொய்கைநல்  லூரஎன்றிட பூங்கா சென்றார்
நேர்மையுடன் என்அடக்கம்  நிலைமை காட்டி
   நெடியகடல் தாண்டிமறு தேசம் போனார் "............
Meaning:
22: Let me tell the divinity of bogar to the people of world. Before attaining samadhi in Palani Bogar wrote to his followers/world the  janana saagaram. He called me and asked to go to Uragai (today's naagai). So I buried the sitthar in palani and listened to his words
23:  While getting buried itself Bogar eluded also disciples around him and reached uragai. From there he took me to Poigal nallur and asked me to repeat the same thing. After doing this Bogar left to another country (China per songs) with korakkar..
These songs clearly explain that Siddhars get buried many times and move to many places after that.
 
இத்துணை கருணை தரவல்ல சித்தர் கோரக்கர் அவர்கள் , எங்கு 
சமாதி தளம் அடைந்தாலும் உணர்வால் வழி நடுத்துபவர்கள்.  முடிந்தால் ஒரு விளக்கு வையுங்கள் அவருக்காக (உண்மையில் உங்களுக்காக) நீங்கள் எங்கு இருந்தாலும் சரி. குருமார்களை  நோக்கி நீங்கள் ஒரு அடி வைத்தால்  அவர்கள் உங்களை நோக்கி பல ஆயிரம் அடிகள்  எடுத்து வைப்பார்கள் என்பது  திண்ணம். 

போகர்





பதினெட்டு சித்தர்களின் ஒருவரான போகர் மகரிஷி பற்றி, நான் ஆராய்ந்து தெரிந்து கொண்ட சில ரகசிய உண்மைகளை பற்றி, இங்கு முருகபெருமான் அருளால் தெரிவிக்கிறேன்.

சில நூற்றண்டுகளுக்கு முன்னால்,வாழ்ந்த மகான்கள்,சித்தர்களின் பிறப்பு,இறப்பு  அவர்களின் வாழ்வின் இறுதி காலம் போன்றவைகளையே, நம்மால் சரியாக தீர்மானமாக அறிய  முடிவதில்லை. காரணம் இது போன்ற தவசீலர்கள்,நம்மை போன்ற, கீழ்நிலையில் உள்ள மானிடர்களுக்கு,வாழ்க்கையின் நெறி முறைகளையும், இறைகோட்பாடுகளையும்,தாங்கள் யோகசக்தியின் மூலம் ஆய்ந்தறிந்த, ஞான யோக மருத்துவ உண்மைகளையும், சித்தர் பாடல்கள் மூலமாக எடுத்து கூறி,நம்மை கடைந்தேற செய்வதையே, முதன்மைப் பணியாகக் கொண்டு வாழ்கின்றனர்.

 சித்தர்களின் வாழ்க்கை வரலாறுகளை,சித்தர் பாடல்களின் மூலமாகவும்,செவிவழி செய்திகளின்,வாயிலாகவும் மட்டுமே,ஒருவாறாக ஊகம் செய்து கொள்ள வேண்டியதாக உள்ளது.

இது போல் தான் பழனியில் ஜீவ சமாதி கொண்டு,பல்லாயிரக்கணக்கான, மக்களின் துயரங்களை சூட்சம நிலையில் இருந்து, தீர்த்து கொண்டிருக்கும்,போகர் சித்தரை பற்றியும், பல்வேறு விதமான கற்பனை செய்திகளும்,அவ்வப்போது வந்து கொண்டிருகின்றன.

இந்த செய்திகளில் சில உண்மையாகவும்,சில தவறானதாகவும் இருக்கின்றன. போகர் சித்தரை பற்றி நாம் அறிந்த வரை,சிலர் போகர் இந்தியாவை சேர்ந்தவர் என்றும்,சிலர் சீனாவை சேர்ந்தவர் என்றும் கூறுகின்றனர். மேலும் போகர் ஆகாயவிமானம் தயார் செய்து,அதில் சிலரை ஏற்றிக்கொண்டு, சீனா,மக்கா,மதினா போன்ற நாடுகளுக்கு, போய் வந்தவர் என்று சொல்லபடுகிறது,குறிப்பாகப் பழனி மலைமேல், வீற்றிருக்கும் நவபாஷாண தண்டாயுதபாணி,முருகன் சிலை போகரால் செய்யப்பட்டது. இது பற்றியும் சர்ச்சைகளும் உள்ளது.

இன்றைக்கு சுமார் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால், இந்த பூமியில் அவதரித்தவர் போகர். இவரின் தந்தை ஒரு முழு தமிழர்.இவர் வணிக தொழிலில் ஈடுபட்டு, கடல் கடந்து பல நாடுகளுக்கு சென்று வருபவர்.

 அப்படி வணிகத்திற்காக சீனா சென்ற போது,தான் சந்தித்து பழகிய, சீனா நாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் தான் அய்யன் போகர்.தம்முடைய பத்து வயது வரை சீனா நாட்டில் வளந்த போகர்,பத்து வயது முடிந்த பின் தன் பெற்றோருடன் தமிழ் மண்ணிற்க்கு வந்து சேர்ந்தார்.

அதன் பிறகு தன்னுடைய 25 வயது நடக்கும் போது, நண்பர்கள் சிலருடன் வணிக கப்பல் ஒன்றின் மூலம் தாம் பிறந்த மண்ணான சீன நாட்டிற்க்கு சென்று வந்தார். தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு சில ஆண்டுகள் மட்டுமே கல்வி கற்றதாகவும், பின்பு ஏட்டு படிப்பினால் பயன் ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து,வாழ்க்கை கடலில் கரை சேர,ஞான கல்வி ஒன்றே தேவை என்று உணர்ந்து,அதற்கான ஆன்மிக தேடலில் இறங்கி உள்ளார்.

இயல்பாகவே இறை பக்திமிக்கவரான தந்தையும், சீனா நாட்டில் பிறந்து வளர்ந்த பெண்ணாக இருந்தாலும்,மண வாழ்விவில் ஈடுபட, தொடங்கிய பின்னர்,தன் கணவர் வழி நின்று,அவரோடு இணைந்து இறை வழிபாட்டில்,ஈடுபாடு கொண்ட தாயாரும்,போகரின் ஆன்மிக வாழ்விற்கு அடிதளமாக இருந்தனார்.

அப்பொழுது பழனியில் நிறைந்து வாழ்ந்த,சித்தர்கள்,யோகிகளின் நட்பு ஏற்பட்டு, போகர் சுவாமிகளும் சித்த மார்க்கத்திலே ஈடுபட துவங்கினார். பெரும்பாலும் பழனிமலையில்,மேலுள்ள குகையிலும்,சில நேரங்களில் பழனிமலையை, சுற்றி இருக்கும் மலைகளிலும் தவயோகத்தில் ஈடுபட்டு வரலானார்.

முற்பிறவிகளில் செய்த தவபலனோடு,இப்பிறவியில் செய்த தவ பலனும் சித்திக்க, சித்தருக்கு எல்லாம் மகா சித்தர் ஆனார். முருகக்கடவுளின் மேல் அதிகமான பக்தி கொண்டிருந்த போகர் சுவாமிகள், முருகனையே வழிபடும் கடவுளாக கொண்டிருந்தார். அதோடு சித்த மருத்துவம்,ரசவாதம்,நவபாஷண ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு தேர்ந்தார். அகத்தியர் போகரே வேதியலின் தந்தை என்று புகழ்கிறார்.

தன் சொந்த உபயோகத்திற்காக ரசலிங்கம் செய்ததாகவும்,நவபாஷணங்களை சுத்தி செய்து தாம் வணங்கும் முருகபெருமானை நவபாஷணங்களில் செய்துள்ளார். இப்படி ஒன்பது நவபாஷண சிலைகளை செய்துள்ளர்.இவற்றில் ஒன்று தான்,நாம் பழனிமலை கோவிலில் வைத்து பூஜிக்கும் முருகன் சிலையாகும்.

மற்ற நவபாஷண சிலைகள் எல்லாம் மறைத்து வைக்கப்பட்டு,தேவகணங்களாலும்,போக மகரிஷியின் சீடர்களாலும் வணங்கி வரப்படுகிறது.கூடிய விரைவில் ஒவ்வொரு சிலைகள் கண்டுபிடிக்கபட்டு,மக்களால் வழிபட கூடிய காலம் விரைவில் வரும்.

போகர் சுவாமிகள் பழனிமலை மேல் தவத்தில் ஈடுபட்டு வந்த காலத்தில், மலை மேல் கோவில் எதுவும் இருக்கக்கவில்லை.மலை அடிவாரத்தில் இருக்கும் முருகன் கோவில் மட்டுமே இருந்துள்ளது.

தமது எழுபது வயது வரை மருத்துவத்திலும்,நவபாஷண ஆய்வுகளிலும், தாம் அறிந்தவற்றை ஓலை சுவடிகளில்,பாடல்களாக எழுதி வருவதிலும் கழித்த போகர் சுவாமிகள், எழுபது வயது துவங்கியதும் மற்ற இடங்களுக்கு எங்கும் செல்லாமல் பழனி மலை மேல் உள்ள குகையில் அமர்ந்து கடும் தவத்தில் ஈடுபடலானார்.

இவ்வாறு பத்தாண்டுகள் இருந்து,பின்னர் அவ்விடத்திலே ஜீவ சமாதி அடைந்தார். அந்த குகை தான் பலகை கல்லால் மூடப்பட்டு,அதன் மேல் மரகத லிங்கம் வைத்து பூஜிக்கப்படுகிறது. போகர் மகரிஷி ஜீவ சமாதி அடைந்த பிறகே,அவரால் வழிபடப்பட்டு வந்த,நவபாஷண தண்டாயுதபாணி சிலை வடிவத்திற்கு,கோவில் கட்டப்பட்டது.

இன்றும் போகர் மகரிஷி பலருக்கு சூட்சும நிலையில் உதவி கொண்டு தான் இருக்கிறார்.சித்தமார்க்கத்தில் இருக்கும் தகுதியானவர்களுக்கு அவரின் சூக்கும தரிசனமும் கிடைக்கிறது.

அப்படி போகரின் அருள் பெற்ற ஒருவர் தெரிவித்த தகவல்களே மேலுள்ளவையாகும். நாம் அனைவரும் பழனியில் ஜீவ சமாதியில் இருக்கும் போகரையும்,உலக நன்மைகளுக்காக, அவரால்   பிரதிஷ்டை  செய்யபட்டுள்ள,நவபாஷண   தண்டாயுதபாணியையும்,  தரிசித்து கர்மவினைகள் நீங்கி நலமோடு வாழ்வோம்.























திங்கள், 16 டிசம்பர், 2013

ஆண்டுக்கு ஒரு முறை மலரும் பிரம்ம கமலம்


  தி இந்து  டிசம்பர் 11, 2013

விதை, கிழங்கு, தண்டு ஆகியவற்றிலிருந்து புதிதாக முளைக்கும் தாவர வகைகளைப் பார்த்திருப்போம். 

பிரம்ம கமலம் என்றழைக்கப்படும் அபூர்வ மலர் வகை தாவரத்தின் இலையை வெட்டி வைத்தாலே புதிதாக முளைத்துவிடும்.

இலையே மண்ணில் வேர்விட்டு வளர்ந்து, பிறகு தண்டு போல் செயல்படும். இலையின் பக்கவாட்டில், சிறுசிறு கணுக்கள் தோன்றி, அவற்றிலிருந்து புது இலைகள் உருவாகும்.

 அவற்றின் கணுக்களில் புதிய மொட்டுக்கள் உருவாகி மலர்களாய் மலரும். 

இந்த மலர்கள் சாதாரணமாக ஆண்டுக்கு ஒரு முறைதான் பூக்கும். அதுவும் நள்ளிரவில் பூத்து ஓரிரு நாட்களில் உதிர்ந்து போகும் தன்மை கொண்டவை.

இந்த மலர் இரவில் மலர்வதற்குக் காரணம் வௌவால்கள், பெரும் அந்திப்பூச்சிகளால் (moths) இவை மகரந்தச்சேர்க்கை செய்யப்படுவதால்தான். நிலவு, நட்சத்தர ஒளி போன்ற குறைந்த வெளிச்சத்தில் இந்த மகரந்தச்சேர்க்கையாளர்கள் இத்தாவரத்தைக் கண்டுபிடிக்கும் வகையில் பெரிய வெள்ளை நட்சத்திரம் போல, ஒரு தட்டு அளவுக்கு மலர்கள் அமைந்திருக்கும்.

 இந்தப் பூவின் வாசம் மனதுக்கு இனிய மணம் கொண்டது. மலர்ந்துள்ள பிரதேசத்தையே ஈர்க்கும் தன்மையுடையது. 

அதற்குக் காரணம், Benzyl Salicylate வேதிப் பொருள்.

 இந்த வித்தியாசமான மலர் இமயமலையைச் சேர்ந்தது. ஆனால், இப்போது சிலர் நம் ஊர்களிலும் வளர்த்து வருகிறார்கள்.

 இதற்கு நிறைய தண்ணீர் வேண்டுமென்ற அவசியம் இல்லை. 

காரணம் இது கள்ளி வகையைச் சேர்ந்த செடி. ஆனால், பாலைவனங்களில் வளரும் கள்ளி வகை அல்ல.

இத்தாவரத்தின் அறிவியல் பெயர் Epiphyllum oxypetalum.
 ஆங்கிலப் பெயர்கள்: Orchid cactus, Jungle cactus, Night blooming cereus, Dutchman's Pipe.

வெள்ளி, 13 டிசம்பர், 2013

பிரபஞ்ச இயக்க தத்துவம்



iநடராஜர்


பிரபஞ்சத்தின் உருவாக்கத்தையும், அழிவையும் தீர்மானிக்கும்
 சக்தி சிவனே. பிரபஞ்சமானது முடிவில்லாத பல காலச் 
சக்கரங்களைக் கொண்டது. ஒவ்வொரு காலச் சக்கரத்தையும்,
 ஆனந்த நடனமாடி அந்த காலக் சக்கரத்துக்கு உரிய அண்டத்
தை உருவாக்கி, தொடர்ச்சியாக நடனத்தின் மூலம் அந்த 
அண்டத்தை விரிவாக்கி, பின்னர் காலச் சக்கரம் முடிவுக்கு
 வரும் போது ஊழித் தாண்டவமாடி அந்த அண்டத்தை
 ஒடுக்கி அழிப்பது சிவனே.
இதுவே நடராஜரின் பிரபஞ்ச இயக்க தத்துவம்.

நடனத்தின் தலைவனாகிய சிவன், நடராஜராக பரத முனிவர்
 முன் தோன்றி, 108 தாண்டவங்களையும், 108
 கரணங்களையும் ஆடிக் காட்டினார்.

திருமுகம் : எல்லையற்ற அழகும் இனிய தண்ணளித்
 திறனும் கொண்டு தலைமைப்பாட்டினைக் குறிக்கும்.
பனித்தசடை: சடை சிவநெறிக்குரிய தவ ஒழுக்கச்
 சிறப்பையும் காட்டுகின்றது.
கங்கை: இறைவனின் பேராற்றலையும் வேகங்கெடுத்தாளு
ம் வித்தகத்தையும் விளக்குவது.
பிறைசூடுதல்: சரண் என அடைந்தவரைத் தாங்கித் 
தாழ்வு நீக்கிப் பாதுகாக்கும் வள்ளல்தன்மை.
குனித்த புருவம்: பரதக் கலையின் மெய்ப்பாடு உணர்த்துவது. 
தன்பாற்போந்து குறையிரந்து முறையிடும் அடியார்களின் 
விண்ணப்பங்களைக் கூர்ந்து நோக்கி ஊன்றிக் கேட்டருளும்
 கருணைத் திறத்தினைக் காட்டுவது.
குமிண்சிரிப்பு: அடைக்கலம் புகுந்தோரை, என்று வந்தாய் 
என்று அருளோடு வரவேற்று, பிழைபொறுத்து வாழ்வளித்து
 மகிழ்விக்கும் மாட்சியைக் குறிப்பது.
பவளமேனி: இறைவன் நெருப்பை யொத்தவன். நெருப்பு
 தன்பால் எய்தும் பொருள்களை எல்லாம் தூய்மையாக்கிப்
 புனிதம் அடையச் செய்வது போல, இறைவனும் 
தன் அடியார்களின் மாசுக்களை நீக்கி – மலம் நீக்கி மாண்புற
ச் செய்யும் அருட் திறத்தைக் குறிப்பது.

பால்வெண்ணீறு: எப்பொருளும் இறுதியில் எய்தும் நிலை
 சாம்பல்தானே! நீறு மற்றொன்றாக மாறி அழியாது. ஆகவே
 பால்வெண்ணீறு தூய இயல்பினையும் அழியாத் தன்மையையும்
 குறிக்கின்றது. தொழுதெழுவார் வினைவளம் நீறெழ இறைவன்
 நீறு அணிகின்றார். மேலும் செந்நிற மேனியில் வெண்ணீறு 
அணிந்த கோலம் எவர் நெஞ்சையும் கவர்ந்து பிணிக்கும் பான்மையுடையது.

நெற்றிக்கண்: மேல் நோக்கிய நிலையில் நிமிர்ந்து நிற்கும்
 நெற்றிக்கண் சிவபிரானின் தனிப்பெரும் முதன்மையை 
உணர்த்துவது. இது சிவபெருமானுக்குரிய சிறப்பு அடையாளம்.

நீலகண்டம்: ஒருவரும் உண்ணாத நஞ்சு உண்டும் இருந்தரு
ள் செய்யும் இறைவனின் நயத்தக்க நாகரிக நலனையும் 
பெருங்கருணைத் திறத்தையும் காட்டுவது.

உடுக்கை: தமருகம் எனப்படும் உடுக்கை, இறைவன் உலகப் 
பொருள்களைப் படைக்கும் சிருஷ்டியைக் குறிப்பது. 
பரநாதத்தைப் பரமன் தோற்றுவிக்கும் பான்மையை இது காட்டுகிறது.

நெருப்பு: இறைவன் இடக்கரத்தில் ஏந்தியுள்ள நெருப்பு. 
உயிர்களின் பிறவித் தளைகளின் இளைப்பினை நீக்கும்
 பொருட்டுச் செய்யும் சம்ஹாரத் தொழிலைக் காட்டுவது.
அபயகரம்: காத்தல் தொழிலைக் குறிப்பது. அடியார்களுக்கு
 ஆறுதல் கூறித் தேற்றும் நிலை இது.

வீசியகரம்: யானையின் துதிக்கையைப் போன்று திகழும்
 இவ்விடக்கை கஜஹஸ்தம் எனப்படும். இக்கையின் விரல்
, தூக்கிய திருவடியைக் காட்டுகின்றது. “திருவடியை நம்பித் 
தொழுக. இது உம்மை ஈடேற்றும்’ என்று உணர்த்துகிறது.

எடுத்த திருவடி: இறைவனின் இடது திருவடி இது. அம்பிகைக்கு 
உரியது. துன்பக் கடலிடைத் தோணித் தொழில் பூண்டு தொண்டர்
 தம்மை இன்பக் கரை முகந்து ஏற்றும் திறத்தைக் காட்டுவது.

ஊன்றிய திருவடி: இறைவனின் வலது திருப்பாதம் இது.
 முயலகனை மிதித்து அவன் மீது ஊன்றிய நிலை. மலத்தை 
முழுதாக அழித்து விடாமலும், மலத்தால் உயிர்கள்
 பெரிதும் வருந்தாமலும், வினைப் பயன்களை உயிர்கள்
 நுகர இறைவன் இயற்றும் மறைத்தல் தொழிலைக் குறிப்பது.

முயலகன்: இது ஆணவ மலத்தைக் குறிப்பது.
தெற்குநோக்குதல்: ஆடவல்லான் தெற்கு நோக்கியே
 ஆடுகின்றார். யமபயத்தை நீக்கியருளி நம்மை
 உய்விப்பதற்காக தென்றல் காற்றின் மீதும் தென்
 தமிழின் மீதும் உள்ள விருப்பாலும் தெற்கு நோக்கி
 இறைவன் ஆடுகின்றார் என நயம்படக் கூறுவார்
 திருவிளையாடற் புராண ஆசிரியர் பரஞ்சோதி முனிவர்.
- வாணிஸ்ரீ , தினமணி