ஞாயிறு, 6 டிசம்பர், 2009

சித்தர்கள் என்பவர்கள் ...




கிருபானந்தவாரியார் முன்போருசமயம்
எங்கள் இல்லத்திற்கு வந்திருந்தபொழுது
என் தந்தையிடம் அளவளாவிக்கிகொண்டிருந்த
பொழுது அருகே சென்ற எனக்கு அவர் எழுதிய
"வாரியார் விருந்து " என்ற நூலினை எனக்கு
பரிசளித்து படிக்கச்சொன்னார் .....

சித்தர்கள் என்பவர்கள் யார் ?
என்ற வினாவிற்கு விடையை
கிருபானந்தவாரியார் ஸ்வாமிகள் 
சொல்வழியே நாமும் அறிவோமா !


"சித்தாந்த செந்நெறியின் நான்குபடிகள் 
சரியை ,கிரியை ,யோகம் ,ஞானம் என்பர் .
இவற்றுள் 
சிவயோக நெறி நின்று ஞானம் 

கைவரப் பெற்றவர்கள் சித்தர்கள்.

சித்தர்கள் ஞானசித்தர்,நாத சித்தர்,
ரசெஸ்வர சித்தர் என்று மூன்று 
பிரிவினராவர்கள் .

உண்மையான ஞான நிலையில் நின்றவர் 
ஞானசித்தர். 

பிராணயாம யோகப் பயிற்சியால் 
சுழுமுனை நாடியில் உண்டாகும்
நாதத்தில் தம் மனதை ஒடுக்கி சமாதி
நிலையில் நின்றவர் நாத சித்தர். 
ரசாயன முறையால் காய சித்தி
அடைந்தவர் ரசெஸ்வர சித்தர்.

இந்த ரசெஸ்வர சித்தர்களே 
வைத்தியம்,ரசவாதம் முதலிய 
நூல்களை செய்த சித்தர்கள் ஆவர் .

ஞானசித்தர் ,சுத்த சன்மார்க்க சித்தர் 
எனவும் அழைக்கப் பெற்றவர் .

அகத்தியர்,பேயார்,திருமூலர்,
பாம்பாட்டியார், கடுவெளியார்,
இடைக்காடர் ,கருவுரார்,சிவவாக்கியர் ,
திருவெண்காடர் ,பத்ரகிரியார்,அருணகிரியார்,
திருமாளிகைத் தேவர் என்ற ஆன்றோர்கள் 
ஞானசித்தர்கள் ஆவார்கள் .

அநாதி நாதர், ஆதி நாதர் ,சடேந்திர நாதர் ,
கோரக்க நாதர் ,சகோத நாதர் ,மச்செந்திர  நாதர்,
சத்ய நாதர்,மாதங்க நாதர் ,வகுளி நாதர் 
என்பவர்கள் நவ சித்தர்கள் .

இங்ஙனம் வந்த சித்தர் மரபு தாயுமானார் 
காலம் வரை தமிழ் நாட்டில் சிறப்பாக 
செழித்திருந்தது .தாயுமானாரின் குருநாதர் ,
திருமூலர் திரு மரபில் வந்தவர் என்று 
தாயுமானரே " மூலன் மரபில் வரு 
மௌவ்ன குருவே " என்று 
 கூறுவதினால் அறிக . "

இவ்வாறு சுவாமிகள் கூறிய 
வார்த்தைகள் என்னுள் சித்தர்களைப்பற்றி 
அறிய , ஆராய ஓர் ஆவலை தூண்டியது ..

இந்த ஆவலும் ,ஆராய்ச்சியும் 
வாழ்நாள் முழுதும் என்னைத் தொடர 
நானுமதை பின்தொடரலானேன் .

- ரத்னம்ஜி 



அறிமுகம்

சித்தர் செம்மொழி
சித்தர்களின் அருள்
பரப்ப வரும் ஓர்
புதிய வலைப்பூ ....

சித்தர் எனும் சொல்லே
இன்றும் ஓர் மர்மச்சொல் ...
தேடத்தேட புதுபொருள்தரும்
சித்தர்தம் மொழியே செம்மொழி

சித்தர் செம்மொழியில் இணைந்து
சித்தர் அருளால் அவர்தம்
செம்மொழியின் பொருள் அறிவோம்
வாரீர் வாரீர் என்றழைக்கின்றோம்