ஞாயிறு, 30 மார்ச், 2014

போகர் - 2

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsiiI7i5YnFXXDIzYhlvilrkj4_vbM0Jq2dca7xAM8saSSxzZlR8aAK1_h9Lcj88qepvp0ZdmzENgYaOGoZUJLY1S1C3Ml_pVGKlQ7nOrVGlqIrdGYOsJzflQP16YNUL8OBTeJGIncHYE/s320/bhogar+with+murugar.jpg




போகர்! சித்தர்கள் பற்றி சிந்திக்கும் பொழுது பாமரருக்கும் கூட பளிச்சென்று புலப்படும் ஒரு பெயர் இது.

மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், ரசவாதம், காயகல்பமுறை, யோகாப்பியாசம் _ என்று சகலத்திலும் உச்சம் தொட்ட ஒரு சித்தர் உண்டு என்றால் அவர், போகர்தான்.

அகத்தியர், இவரைத்தான் முதல் சித்தன் என்று ஒரு பாட்டின் மூலம், கூறுகிறார்.


சமயத்தில் உதவியவர்களைப் பார்த்து 'கடவுளைப் போல உதவினீர்கள்... என் வரையில் நீங்களே கடவுள்' என்று சொல்வோம், அல்லவா...!

அப்படித்தான், போகரின் செயல்திறத்தைப் பார்த்து இவரே முதல் சித்தன் என்று அகத்தியர் கூறியதும். உண்மையில், முதல் சித்தன் அந்த ஆதிசிவன்தான். அவனே மதுரையம்பதியில் சுந்தரானந்தனாக வந்து அருளிச் சென்றான்.

போகரைப்பார்த்து வியப்பதற்கு ஏராளமான காரண காரியங்கள் உள்ளன. பொதுவில் சித்தர் எனப்படுபவர்கள், இந்த உலகம் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளை புறந்தள்ளியவர்கள்.

ஆலயம் செல்லுதல், விக்ரகங்களை பூஜித்தல், ஆசார சடங்குகளில் நாட்டம் கொள்ளுதல் என்பதெல்லாம் விடுத்து, தங்களுக்குள்ளேயே இறைவனைக் கண்டு இன்புற்றவர்கள்.

ஆனால் இதில், போகர் பெரிதும் வேறுபட்டே தெரிகிறார். பல சித்தர்கள் போல், இவரும் ஒரு சிவத் தொண்டரே. அதே சமயம், அன்னை உமையை தியானித்து அவளருளையும் பெற்றவர்.அவளது உபதேசம் கேட்டு பழனி மலைக்குச் சென்று தவம் செய்து முருகனை தண்டாயுத பாணியாகவே தரிசனம் செய்தவர்.

உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக, தான் தரிசித்த தண்டாயுபாணிக்கு நவபாஷாணத்தால் சிலை எடுத்தவர்.

பாஷாணங்களைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதம்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம். அவைகளை உரிய முறையில் சேர்ந்துப் பிசைந்தால்தான் உறுதியான, ஒரு பொதுவான பாஷாணம் உருவாகும். இதை நயனங்களால்
பார்த்தாலேகூட போதும். அதிலிருந்து வெளிப்படும் நுட்பமான கதிர்வீச்சு, கண்வழியாக உடம்பின் உள்ளும், உடம்பின் புறத்திலும் படிந்து, நலம் ஏற்படும். இதன்மேல் பட்டு வழியும் பொருள் எதுவாயினும் அதுவும் மருத்துவ குணம் கொண்டு தீராத வியாதியை எல்லாம் தீர்த்து வைக்கும்.

உயர்வான பாஷாணங்கள் ஒன்பதை தேர்வு செய்து அதைக் கொண்டு போகர் செய்ததுதான் பழனிமுருகனின் மூலத் திரு உருவம். அவ்வாறு செய்ததோடல்லாமல், அவ்வுருவத்திற்கு ஏற்ற வழிபாட்டு முறையை ஒரு புதிய சித்தாகமமாகவே உருவாக்கி அதையும் நடைமுறைப்படுத்தியவர் போகர்.

மனிதப் பிறப்பானது கோள்களால் நிர்வகிக்கப்படுவதை உணர்ந்து அந்தக் கோள்களின் குணங்களைக் கொண்ட ஒன்பது பாஷாணத்தை தேர்வுசெய்து அதிலிருந்து தண்டாயுத பாணியை செய்து, கோள்களை ஓர் உருவுக்குள் அடக்கிப் பூட்டியவர் போகர் என்றும் கூறுவர்.

தண்டாயுத பாணியை எவர் வந்து தரிசித்து வணங்கினாலும் நவ கோள்களையும் ஒருசேர வணங்கிய ஒரு வாய்ப்பும் அவர்களுக்கு உண்டாவது, இதனுள் அடங்கிக் கிடக்கும் இன்னொரு நுட்பம்.

இப்படி பழனியம்பதியில் முருக வழிபாட்டிற்கு களம் அமைத்த போகரின் வாழ்க்கையும் ஒரு வகையில் நவரசங்களால் ஆனதுதான்.

பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி வைகாசி மாதத்து பரணி நட்சத்திரத்தில் பிறந்த போகரின் பிறப்பு மூலம் பற்றி பெரிதாக செய்திகள் இல்லை. ஆனால்,நவசித்தர்களில் ஒருவரான காலாங்கி நாதரின் மாணவர் இவர் என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒரு செய்தி.அதை இவரது, அரிய நூல்களுள் ஒன்றான 'போகர் ஏழாயிரம்' எனும் நூலின் வழி அறியலாம்.

பதினெண் சித்தர் வரிசை தோன்றுவதற்கு முன்பு, நவசித்தர்களே பிரதானமாகக்கருதப்பட்டனர். மேருமலைதான் இவர்களின் யோகஸ்தலம். மேருவும் இமயமும் உலகப் பற்றில்லாத சித்த புருஷர்கள் பெருமளவு சஞ்சாரம் செய்யும் ஒரு வெளியாகவே விளங்கியது.

இங்கேதான் நவநாத சித்தர்கள் வசித்து வந்தனர். அவர்களுள் ஒருவர், காலாங்கிநாதர். காலாங்கி நாதர், போகர் வந்த சமயம் மகாசமாதியில் இருந்தார்.

போகர், சமாதியில் உள்ள காலாங்கி நாதரை வணங்கி, அவ்விரு மலைகளிலும் பல தாது வகைகளை தேடிக்கண்டு பிடித்தார். அதைக் கொண்டு பல காய கற்பங்களை செய்து, தானே உண்டு பார்த்து அதன் பயனையும் உடனே அடைந்தார். இதனால் அவரது தேகம் மிகவும் திடமாகியது. மேலும், வானவெளியில் பறப்பது, நீர்மேல் நடப்பது போன்ற செயல்பாடுகள் எல்லாம் மிக மிகச் சாதாரணமாகியது. இதனால் போகருக்குள் கர்வம் துளிர்த்துவிட்டது. 


துரோணருக்கு ஓர் ஏகலைவன் போல தானும் குருவை வணங்கி அந்த அருளாலேயே பல தாதுக்களை கண்டறிந்து விட்ட ஒருவன்; உண்மையில் காலாங்கி நாதருக்கு சீடர்கள் இருந்திருந்தால், அவர்கள் கூட இப்படி எல்லாம் அறிந்திருக்க மாட்டார்கள்; என்றெல்லாம் நினைக்கத் தொடங்கிவிட்டார்.

இதனால், அந்த மலைத் தலத்தில் பணிவாக பார்த்துப் பார்த்து நடந்தவர், நிமிர்ந்து நெஞ்சு நிமிர்த்தி நடக்க ஆரம்பித்தார்.

மேருவிலும் இமயத்திலும் சூட்சம வடிவில் பலநூறு சித்த புருஷர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களில் பலரது தவம், போகரின் கர்வமான நடையால் கலைந்தது. அவர்கள் கண்விழித்ததோடு போகருக்கும் காட்சியளித்தனர். திடுக்கிட்ட போகரிடம் நாங்கள் காலாங்கி நாதரின் மாணவர்கள். பலப்பல யுகங்களாக எங்களை மறந்து தவம் செய்தபடி இருக்கிறோம் என்றார்கள். அத்தனை யுகங்களும் சில நாட்கள் கடந்தது போலத்தான் இருக்கிறது என்று அவர்கள் கூற, போகருக்கு அது ஆச்சரிய அதிர்ச்சியாகியது.அப்படியானால் அவர்கள் தவத்தை எவ்வளவு பெரிய விஷயமாக கொண்டிருக்க வேண்டும் என்றும் தோன்றியது. அந்த நொடி, தான் கற்ற தாதுவித்தை எல்லாம் மிக அற்பமானது என்கிற எண்ணம் ஏற்பட்டு அவரது கர்வமும் அடங்கியது. அதை அறிந்த அந்த சித்தபுருஷர்கள், போகருக்கு பல சித்த ரகசியங்களை போதித்தார்கள்.
ஒரு சித்தர், போகர்மீது பெரும்கனிவு கொண்டு, 'மிர்தமணிப்பழம்' என்னும் தேவக்கனி மரம் ஒன்றை அந்த வெளியில் காட்டி, அதன் பழங்களை உண்ணச் சொன்னார். அதை உண்டால் ஆயுள்முழுக்க பசிக்காது, நரைக்காது, முதுமை உண்டாகாது. இதில் உள்ள பழத்தை உண்டுவிட்டே இங்குள்ளோர் காலத்தை வென்று தவம் செய்கின்றனர் என்று கூறிட,போகர் அந்தக் கனிகளை உண்டு உடம்பின் பிணியாகிய 'பசி, தாகம், மூப்பு' என்கிற மூன்றிலிருந்தும் விடுதலை பெற்றார்.

இப்படி படிப்படியாக முன்னேறிய போகருக்குள் சில விசித்திரமான எண்ணங்களும் ஏற்பட்டன. அவை முழுக்க முழுக்க மனித சமுதாயம் தொடர்பானவையே..

ஒரு உயிர் எதனால் மனிதப் பிறப்பெடுக்கிறது? அப்படிப் பிறக்கும்போது அது எதன் அடிப்படையில் ஏழையின் வயிற்றிலும், பணக்காரனின் வயிற்றிலும் பிறக்கிறது?

இறப்புக்குப்பின் கொண்டு செல்வது எதுவும் இல்லை என்று தெரிந்தும் வாழும் நாளில் மனிதன் ஏன் ஆசையின் பிடியிலேயே சிக்கிக் கிடக்கிறான்? எவ்வளவு முயன்றும் அவனால் மரணத்தை ஏன் வெற்றி கொள்ள முடியவில்லை?

இப்படிப் பலவித கேள்விகள் போகரை ஆட்டிப்படைத்தன. மொத்தத்தில் மனித சமூகமே வாழத் தெரியாமல் வாழ்ந்து விதியின் கைப்பாவையாக இழுத்துச் செல்லப்படுவது போல உணர்ந்தவர், மனித சமூகத்தை காப்பாற்றியே தீர வேண்டும் என்று எண்ணம் கொண்டார்.

இதனால், தானறிந்த மருத்துவ மூலிகை ரகசியங்களை நூலாக எழுதினார் அவைதான் 'போகர் ஏழாயிரம்', போகர் நிகண்டு, 17000 சூத்திரம், 700 யோகம் போன்றவை.

இவர் உள்ளத்தில் மனித சமூகத்தை நோயின்றி வாழவைக்கும், அரிய குறிப்புகள் தோன்றின.

அதேசமயம், இவருக்கு எதிர்ப்பும் தோன்றியது. பல சித்த புருஷர்கள் இவரை பெரிதும் எதிர்த்தனர்.

சித்த ரகசியங்களை எழுதிவைப்பது ஆபத்து என்றனர். மனிதன் அனுபவிக்க வேண்டிய கர்மங்களை முற்றாக நீக்க முயற்சிப்பது இயற்கைக்கே ஊறு விளைவிக்கும் என்றெல்லாம் புகார்கள் கூறினர். போகர் அவற்றை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. சஞ்சீவி மூலிகை, ஒருவர் கையிலும் அகப்படாதபடி விலகி ஓடும் இயல்பு உடையது. இதை அறிந்த போகர், அதை ஒரு மந்திரத்தால் கட்டி பின்பு அதை கைப்பற்றி காட்டினார்.

அந்த மந்திரம், தம்பணா மந்திரம் எனப்படுகிறது. இன்றும் காடுகளில் மூலிகை தேடிச்செல்வோர் தம்பணா மந்திரத்தை மானசீகமாக உச்சரித்து, காணப் பெறாத மூலிகைகளையும்கண்டு அதைக் கைப்பற்றுவர்.

அமிர்தத்துக்கு இணையான ஆதிரசத்தையே இவர் கண்டறிந்தார் என்பர். அதைக் கொண்டு இரும்பைத் தங்கமாக்கலாம். ஆதிரசமோ, அமிர்தமோ தேவர்களுக்கே உரியது. அசுரர்களோ மானிடர்களோ அதை உண்டால் அதனால் உலகம் அழிந்து விடும் அபாய நிலை உருவாகும் என்று பல சித்த புருஷர்கள் அஞ்சினர்.

தங்கள் அச்சத்தை தட்சிணா மூர்த்தியாகிய சிவபிரானிடம் கூறிட, சிவபிரானும் அவர்களது கவலையை நீக்குமூலமாக போகரை அடைந்து அவர் அறிந்து எழுதிய அவ்வளவு ரகசியங்களையும் கேட்டார்.

போகர் எழுதியதை, போகர் போல ஒரு சித்தரால் அன்றி சராசரி மனிதர்களால் விளங்கிக் கொள்ள இயலாது என்பதை அதன் மூலம் அறிந்த அவர், போகரின் முயற்சியை ஆசிர்வதிக்கவேசெய்தார். அதன்பின் இவர் புகழ் பலமடங்கு பெருகியது. பலரும் இவரிடம் வந்து கற்பங்கள், குளிகைகள் பெற்றுச் சென்றனர்.

மொத்தத்தில் மனித சமூகத்தை, இம்மண்ணில் உள்ள பொருட்களைக் கொண்டே, தேவர்களுக்கும் கந்தவர்வர்களுக்கும் இணையாக ஆக்கினார்.

அண்டை நாடான சீன தேசமும், நமது நாவலந் தீவாகிய பாரத தேசமும், புவி இயலில் அனேக ஒற்றுமைகள் கொண்டிருந்தன. இதனால், மூலிகைச் செல்வங்கள் இவ்விரு தேசங்களில்தான் மிகுந்து காணப்பட்டது. எனவே வான்வழியாக அடிக்கடி சீனதேசம் சென்று வருவது போகரின் வழக்கமாகியது.

அங்கே, 'போ யாங்' என்ற ஒரு சீன யோகியின் உடம்புக்குள், கூடுவிட்டு கூடு பாயும் முறையில் புகுந்து, சீனராகவே வாழ்ந்தார் என்றும் ஒரு கதை உண்டு.

சீனர்கள், இந்தியர்களில் இருந்து உணவுப் பழக்க வழக்கங்களில் பெரிதும் வேறுபட்டவர்கள். இந்திய உணவில் எண்ணெய், கொழுப்பு சத்து, காரம்,
புளிப்பு, உவர்ப்பு என்றெல்லாம் பல சுவைகள் உண்டு. சீனர்களிடம் அப்படி இல்லை. அவர்களது உணவுமுறை ரஜோ குணத்தை தூண்டுவதாகவும்; எலும்பு, நரம்பு இவைகளை வலுவாக வைத்துக்கொள்ளத் தக்கதாகவும் இருந்தமையால், அவர்களிடம் பல வித்யாசமான பயிற்சி முறைகள் இருந்தன.அதில் 'ரஜோலி' என்னும் யோக முறையும் ஒன்று.

போகர் அதை ஆர்வத்துடன் பழகிடும்போது தலையில் அடிபட்டு அவருக்குள் அவர் பற்றிய அவ்வளவு எண்ணங்களும் மறைந்துபோன. பின்னர், அவரைத் தேடிக்கொண்டு வந்த போகரின் மாணாக்கர்களில் ஒருவரான புலிப்பாணி, போகரின் நிலை கண்டு கலங்கி, அவரைத் தன் முதுகில் சுமந்துகொண்டு இந்தியா திரும்பினார் என்றும் சொல்வர்.

அதன்பின் குருவுக்கே அவரிடம் கற்றதை உபதேசித்து, அவருக்குள் மீண்டும் பழைய எண்ணங்களை தோற்றுவித்தார். ஒரு சீடன், குருவுக்கு உபதேசிப்பது என்பது காரியப் பிழையில் முடிந்து, முடிவில் அவனையே சாபத்திற்கு ஆளாக்கிவிடும் என்பதால்,புலிப்பாணி, போகரின் தண்டத்திற்கு உபதேசிப்பது போல போகருக்கு உபதேசித்து போகரை மீண்டும் நிலை நிறுத்தினார். அதன்பின், போகர் ஒரு புத்துயிர்ப்போடு எழுந்தார்.பலவித அனுபவங்களால் பழுத்த ஞானியாகிவிட்ட அவர், இறுதியாக வந்து சேர்ந்த இடம்தான் பழனி. அங்கேயே முக்தியும் அவருக்குக் கிட்டியது. மொத்தத்தில் போகர் என்றால் 'நவநாயகர்' என்றும் கூறலாம்.

மாமன்னன் ராஜராஜனின் குருவாக கருதப்படும் கருவூரார் சித்தரின் சிலை.



மாமன்னன் ராஜராஜனின் குருவாக 
கருதப்படும் 
 கருவூரார் சித்தரின் சிலை. 
இவருடைய சன்னதி முன்பாக
 அமர்ந்து பக்தர்கள்
தியானம் செய்வது வழக்கம்.

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

பர்வதமலை - 3




ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து
ஓம் சர்வம் குரு போகர் சரணம்
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-----------------------------------------------

சமாதி லிங்கங்களை வழிபட்டுட்டு , அப்படியே

 நடக்கஆரம்பிச்சேன் , அவ்ளோ அடர்ந்த வனம் 
இல்லை , மரங்கள்இருந்துது ஆனா அவ்ளோ 
குளிர்ச்சி இல்லை , ஒத்தை அடி பாதை ,கரடு 
முரடான கற்கள் என்று வெறும் காலில் நடப்பது 
என்பது சற்றுசிரமமான ஒண்ணா தான் இருந்துச்சு , 
ஆனா கிரிவலம் போறாமாதிரி இல்லை , அங்க நாம
 நடக்கும் போது , ஒரு பத்துநிமிஷத்துக்கு 
ஒருத்தரையாவது பாக்கலாம் , இங்க அப்படிஇல்லை ,
 துப்புரவா யாருமே இல்லை , நம்ம திரு . நாயார் 
இருந்தாகூட தேவலாம் போல இருந்துது , நடக்க
 நடக்க நல்ல வியர்வைவர ஆரம்பிச்சது , சட்டைய
 கழட்டி தோள்ள போட்டுகிட்டு நடக்கஆரம்பிச்சேன் 
வீரபத்திரன் கோயில் பூசாரி சொன்னா மாதிரி 
ஒருஇடத்துல மொட்டை பெரிய சைஸ் பாறை இருந்துது 
,பக்கதுலையே கொஞ்சம் போல ஊற்று மாதிரி தண்ணி
 வந்துட்டுஇருந்துது , தண்ணி பட்டு பட்டு பாறையும்
 கொஞ்சம் போலசில்லுனு இருந்துது , மலை ஏற்றது
 முதல் அனுபவம் , அதுவும்இல்லாம தனியா 
காட்டுக்குள்ள போறது கொஞ்சம் த்ரில்லாஇருந்துது ,
 ஆனா கொஞ்சம் பயமாவும் இருந்துது , 
சரி கொஞ்சம்படுப்போம்னு படுத்துட்டு , பிறகு 
அவர் சொன்ன குழிகள தேடினேன்அங்க அங்க 
இருந்துது , எல்லாமே கொஞ்சம் பச்சை கலராஇருந்துது ,
 அது மூலிகையா இல்லை பாசியானு தெரியல ,
இருந்தாலும் கொஞ்சம் போல உறிஞ்சி குடிச்சிட்டேன் , 
மலைங்க ,காடுகள் இங்க எல்லாம் போனா இத மாதிரி 
தண்ணிய மிருகங்ககுடிக்கறது போல நேரா 
குடிச்சோம்னாஅதுவே ஒரு தனிசுகமாதான் இருக்கும் , 
சமீபத்துல பொதிகை மலை போனப்ப கூடஇத மாதிரி
 குடிச்சி குதூகலமா இருந்தோம் நானும் நம்ம சிவாவும் .

ஒரு பத்து , பதினஞ்சி நிமிஷம் கழிச்சி , அங்க இருந்து

 திரும்பவும்மேல ஏற ஆரம்பிச்சேன் , இதுக்கு மேல 
ஏற்றது கொஞ்சம்சிரமமாதான் இருந்தது , இருந்தாலும் , 
பெரியவர் குடுத்த ஊக்கம் ,சொன்ன இடங்கள் பாக்க 
ஆவலா இருந்ததால , மூச்ச புடிச்சி கிட்டுமேல ஏற 
ஆரம்பிச்சேன் , சீக்கிரமே வந்துடிச்சு முக்கூடல் , 
அங்கநின்னு மலைய பாத்து ஒரு கும்பிடு போட்டுட்டு 
அப்படியேதிரும்பவும் அந்த நேட்டான பாதைல ஏற 
ஆரம்பிச்சேன் , அப்படிஇப்படின்னு அசைஞ்சி , ஒரு 
வழியா கடப்பாரை நெட்டுஆரம்பிக்கிற இடத்துக்கு 
வந்தாச்சு , வாழ்க்கைல முதல் தடவையாகடப்பாரை 
எல்லாம் புடிச்சிட்டு ஒரு சாகசமான பயணம்பண்ணபோரோம்னு , சுறுசுறுப்பாஆகிட்டேன் .

இங்க ஒரு சின்ன விஷயம் , இந்த முதல் பயணத்துக்கும் 

அடுத்துஅடுத்து போனதுக்கும் , கொஞ்சம் வித்யாசம்
 இருந்தது , ஏன்னாஇங்க இருந்த கடப்பாரை எல்லாம் 
முதல் முறையும் அடுத்துசென்ற ஒரு நான்கைந்து முறையும் 
தான் கடப்பாரை முனைலவேல் மாதிரி இருந்தது , அதுக்கு அப்பறம் போன பயணங்கள்ள ,பக்த்தர்கள் எல்லாம்
 சேந்து இன்னும் நிறைய கடப்பாரைகளையும் ,
சங்கிலிகளையும் போட்டு இருந்தாங்க , அதே மாதிரி
 தண்டவாளபடில எல்லாம் முதல்ல தண்டவாளம் 
மாதிரியான அமைப்புமட்டும் தான் இருந்தது , ஏணி படினா
 , ஏணி மட்டும்தான் இருந்தது ,அதுல ஏற்றது என்பது 
த்ரில்லாவும் இருந்தது , கொஞ்சம் ரிஸ்க்கும்கூட , 
அதுக்கு அடுத்த அடுத்த பயணங்களில் கொஞ்சம்மாற்றங்கல் 
இருந்தது , அது பாதுகாப்புதான் , இருந்தாலும் சாகசபயணம் , 
அப்படி இப்படின்னு என்ன மாதிரி சுத்த வரகோஷ்ட்டிகளுக்கு 
மிஸ் பண்ண மாதிரிதான் .

சரி கடப்பாரை நெட்டுக்கு வருவோம் , கடப்பாரை 

எல்லாம்முதல்ல பிடிக்கும் போது கொஞ்சம் பக்கத்துல 
பக்கத்துல இருந்துதுஒரு நாலு அஞ்சு தாண்டின பிறகு
 எல்லாம் எட்டி பிடிக்கிறாமாதிரிதான் இருந்துது எட்டி கூட
 பிடிச்சிடலாம் போல மேல கால்வைக்க சின்ன குழி 
இல்லனா ஒரு க்றிப் கூட இல்லை , 
என்னடாஇது சாகசமா நினச்சு வந்தா இப்படி நடு 
வழில மாட்டிகிட்டோமேனுரொம்ப பொறுமையா
 க்றிப் கிடைக்கிற இடமா பாத்து பாத்து பிடிச்சிஏர்றதுக்கு
 தடுமாற்றமா தான் இருந்தது , ஹ்ம்ம் ஏறியாச்சுஒருவழியா ,
 அடுத்து ஏணி , நல்லா துரு பிடிச்சி கொஞ்சம் அழுத்திகால்
 வெச்சா உடைஞ்சிடும் போல இருந்துது , 
ஆனா கால் வெச்சிஏறும் போது தான் தெரிஞ்சிது 
அது எவ்ளோ ஒரு உறுதியானஇரும்புனு , ரொம்ப 
எடை அதிகமாவும் இருக்கும் போல , எந்தபுண்ணியவான்
 தூக்கிட்டு வந்து வெச்சாருன்னு தெரியல , நம்மஏர்றதுக்கு
 பயன்படுது . கொஞ்சம் கொஞ்சமா மேல ஏறிபோனோம்னா
 அதுக்கு மேல இருக்குற பாதை எல்லாம் ரொம்பபாத்துதான்
 போகணும் கொஞ்சம் வழி தெரியாமமுன்னேறினாலும் 
அதல பாதாளம் தான் .

தீட்டு காரி மண்டபம் , ஒரு சின்ன தண்டவாள 

படியதாண்டினோம்னா வருது , பொதுவா அந்த 
மண்டபம் பத்திசொல்றது என்னன்னா , மலைக்கு
 ஏறி வர பெண்கள் மாத விளக்குஆகின்ற நேரத்துல
 இங்க தங்கிக்கலாம்னு சொல்லுவாங்க , ஆனாஇடம் 
பாத்தா வேற சில கோணத்துல யோசிக்க தோணும் ,
மாநன்னன் ஆண்ட காலத்துல இது வீரர்கள் , 
உளவுநோட்டமிடுபவர்கள் , அவர்களுக்கு 
சமையல் செய்றவங்க தங்கிறஇடமா இருந்திருக்கலாம் 
ஏன்னா இதுக்கு பக்கத்துல தான் பாதாளகிணறும் 
பாப்பாத்தி சுனைக்கு போற வழியும் இருக்கு ,
 இந்தபாப்பாத்தி தெயவத்த பத்தி சொல்லாம விட்டுட்டனே .

அதாவது , பழங்காலத்துல ஒரு ஆச்சாரமான 

பிராமண தம்பதியர்திருவண்ணாமலைய்க்கு 
வந்தப்போ , பர்வதமலை பத்தி கேள்விபட்டு இங்க 
வந்து இருக்காங்க , இப்பவே இப்படி இருக்கு 
நான்சொல்ற இப்பங்க்றது தொண்ணூறாம் வருஷம் )
 அப்போ அதாவதுஒரு ஆயிரம் வருஷத்துக்கு முன்ன 
எப்படி இருந்து இருக்கும் ,ரொம்ப கஷ்டப்பட்டு ஏறி 
தரிசனம் பாத்துட்டு வரும் போது அந்தபிராமண 
பெண்ணோட கணவர் தவறி விழுந்துட்டு இருக்காரு 
,உயிர் பிரிஞ்சிடிச்சு , அந்த பெண் ரொம்ப ஆச்சாரமான 
குடும்பத்துலஇருந்து வந்ததால சாவித்திரி போல சாமி
 கிட்ட சண்டையே போடஆரம்பிச்சிட்டாங்களாம் ,
 உன்னை பாக்க வந்து தான இப்படி ஆச்சு ,ஒன்னு என்னோட
 பதிய உயிரோட திரும்ப குடு , இல்லைனாஎன்னையும்
 இங்கியே சாக அடிச்சிடுனு பெரிய வைராக்கியத்தோட
கேட்டாங்கலாம் , சாமி கிட்ட இருந்து எந்த பதிலும் 
காணோம் , சரிஇங்கியே உன்னோட இடத்திலையே 
என்னோட உசுரும்போகட்டும்னு கீழ குதிச்சிட்டாங்கலாம் , 
இத மாதிரி ஒருகற்புக்கரசிய சாமி சும்மா விடுமா ,
 இல்லை அத மாதிரி ஒருபெண்ணோட 
சாபம்தான் சாமியையே ஆட்டி வெச்சிடாதா ,
 சாமியும்இறங்கி வந்து அவங்கள விழுந்த 
இடத்துல இருந்து உயிர் பித்துசொன்னாங்களாம் , " உன்னோட கணவரின் புண்ணிய பலம் தான்இங்க 
வந்து அவர் உயிர் பிரிய காரணம் , இங்க உயிர் பிரிஞ்ச
 தாள ,அவருக்கும் மோட்சம் என்கின்ற பிறவா நிலை 
கிடச்சிடிச்சி , இதுலநீ துக்கமோ துயரமோ பட எதுவும் 
இல்லை , ஒரு பதிவிரதைகணவன் மோட்சம் அடையறதுக்கு 
பாடுபடுவது கூட அவளின்முக்கிய கடமைல ஒண்ணுதான் , 
அதனால நீ கலங்கி புலம்பஎதுவுமே இல்லை , 
உன்னுடைய விதியும் இங்க வந்துதான் எல்லாயோக
 முறையும் கற்று தேர்ந்து பிறவா நிலை அடையணும்னுஇருக்கு , 
இங்கு இருக்கும் சித்த புருஷர்கள் உனக்குஎல்லாவற்றையும் 
கற்று கொடுத்து , உன்னை நன்னிலை அடையவைப்பாங்க , 
அதுவரை நீ உன்னுடைய கணவரயும் சூட்சுமமாஉணரலாம் " 
அப்படின்னு சொல்லி அருள் புரிஞ்சாங்கலம் 
அந்தபிரம்மராம்பிகை தாய் . அவங்களும் சித்த 
பெருமான்கள் கிட்டமுறையா எல்லாம் தெரிஞ்சிகிட்டாங்கலாம் 
அதே மாதிரிபதினெட்டு சித்தருக்கும் அங்க லிங்க வடிவுல
 சிலை வெச்சி வழிபட்டாங்களாம் , கொஞ்சம் சமயோஜிதமா 
யோசிச்சி கொஞ்சம்பதிய உத்து பாத்து போனோம்னா 
அத நம்மளும் பாக்கலாம் ,பொதுவா யாரும் இந்த 
விஷயம் தெரியாததால அந்த இடத்துல இதகவனிக்கற
து இல்லை , அந்த அம்மா அங்கையே தங்கிஇருந்ததால 
அந்த சுனைக்கும் அந்த இடத்துக்கும் , பாப்பாத்திசுனைன்னு
 பேரு , அதுவும் இல்லாம அவ்ளோ கரடு முரடானஇடத்துல
கூட , என்னதான் வெய்யில் அடிச்சாலும் 
அந்த ஒரு இடம்மட்டும் அவ்ளோ ஒரு 
இதமா அமைதியா இருக்கும் , பல பேர் 
அதநல்லா உணர்ந்து இருப்பாங்க , ஆனா 
மேட்டர் தெரியாம இருந்துஇருக்கும் . மலைல எங்க தண்ணி இல்லாம இருந்தாலும் 
இங்ககண்டிப்பா இருக்கும் .

அந்த பாதாள கிணறு , பேரு வெச்சாலும்

வெச்சாங்க இப்படியா ,பயங்கர ஆழம் , 
அனேகமா இதுவும் நன்னன் காலத்தியதாதான்இருக்கும் , 
இந்த காலத்துல அதுவும் அந்த இடத்துல
 கிணறுதோன்றது ரொம்ப கஷ்டம் , 
இதுலயும் ஒரு விஷயம் இருக்கு ,
கிணத்துக்குள்ள கீழ இறங்கினோம்னா ,
 ஒரு சுரங்க வழிஇருகரதாகவும் அதுக்குள்ள 
போனோம்னா பலவிதமான மலர்கள் ,மூலிகைகள் ,
 மரங்கள் , பழங்கள் கொண்ட பெரிய தோட்டமும் ,
அங்க சித்த புருஷர்கள் சாதனைல இருகர்தாகவும் 
கேள்வி பட்டுஇருக்கேன் , ஒரு முறை நிறைய டூல்ஸ் ,
 கயிறு எல்லாம்எடுத்துட்டு போய் , நண்பர்கள் 
ஒரு பத்து பேர் போய் இறங்கிபாத்தோம் , 
ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல போக 
முடியல ,கொஞ்சம் பயமும் காரணம் .

சரி நம்ம இதுக்கு மேல சந்நிதானத்துக்கு

 போவோம் . ஆகாய பாதைரொம்பவே திகிலான 
இடம் தான் இது இடது பக்கம் கொஞ்சம்திரும்பி 
பாத்தாலும் ஒரு அடி எடுத்து வைக்க தோணாது ,
 முழுக்கமுழுக்க பள்ளம் , கொஞ்சம் கால் இடறினாலும்
 அவ்ளோதான் சீன்ஆய்டுவோம் , அதுவும் அப்போ
 சுத்தமா ஒரு சங்கிலியோ , இல்லைஒரு சப்போர்ட்டோ 
இருக்காது , வலது பக்கம் இருக்குற பாறையபிடிச்சிகிட்டு
 தான் மெல்ல நகர்ந்து போக முடியும் , 
இப்பஎவ்ளோவோ தேவலாம் ( நான் கடைசியா
 இங்க போனதுஇரண்டாயிரத்துல , இப்ப எப்படி 
இருக்குனு தெரியல ரொம்பவேமாறிட்டதா 
கேள்வி பட்டேன்) , அந்த கொஞ்ச தூரத்த கடக்கும்
 பாடுஇருக்கே 
அப்பா சொல்லி மாளாது , இத தாண்டிட்டோம்னா ,
அப்பா....... மலை உச்சி , சும்மா நச்சுனு இருக்கும் , 
முதல்ல ஒருகுட்டி மலை மேடு அத தாண்டினா சந்நிதானம்.

KADAPARAI NETTU ( 1995 )






அடுத்த பதிவுல சந்நிதானம் , கோமண சாமியார் , அம்மாவோடஅழகு எல்லாம் பாக்கலாம் .


ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து 
ஓம் சர்வம் குரு போகர் சரணம்
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி