வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

பர்வத மலை - 2

 
ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து
ஓம் சர்வம் குரு போகர் சரணம்
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-----------------------------------------------

கொஞ்சம் சுதாரிச்சி , கொஞ்சம் பின்வாங்கி பாத்தா 
பச்சை கலர்துண்டு , வேட்டியோட ஒரு ஆளு ,
 நல்ல கம்பீரமான குரலோடஆனா கொஞ்சம் 
கனிவோட , " யாருப்பா அது , என்னவேணும்
 "கேட்ட பிறகுதான் ,
 பயமே போச்சு , அப்பறம் பேச பேச தான்தெரிஞ்சிது 
அவர்தான் அந்த கோயில் பூசாரினு , நிறைய
 விஷயம்சொன்னாரு , இந்த பச்சை அம்மனும் , 
ஐயனாரும் தான் இங்ககாவல் தெய்வங்க , ஊருல 
எல்லாரும் எல்லா விசேஷத்துக்கும்இங்கவந்து
 தான் எல்லாம் பண்ணுவாங்க , ரொம்ப சக்தி 
வாய்ந்தசாமிங்க , ராத்திரி ஆன இங்க உலவ 
ஆரம்பிச்சிடுவாங்க , எதாவதுதப்பு தண்டா பண்ணா 
அவ்ளோதான் , இதுக்கு அப்பறம் கொஞ்சதூரம் உள்ள
 போனா அங்க வீர பத்திரன் கோயில் ஒன்னு இருக்கு ,
அது இன்னும் உக்கிரமான சாமி , மலைக்கு உண்மைய
 கும்பிடவரவங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியும் கூட , 
வேணும்னா அங்கபோய் கும்
பிட்டுட்டு இங்க திரும்ப வந்து இரவு தங்கிட்டுஅதிகாலைல 
கிளம்புங்க , இப்ப கைல டார்ச் லைட் கூட இல்லாமஏறது
 சிரமமான காரியம்னு சொன்னாரு , நான் அவர் கிட்ட , 
ஐயாஇப்ப இங்க இருந்து அந்த வீரபத்திரன் கோயிலுக்கு
 போறதே ,பெரிய விஷயமா இருக்கும் போல , 
நான் இங்கியே தங்கிட்டுகாலைல கிளம்பறேன் ,
 நல்ல பசிக்கிது , எதாவது கிடைக்கு
மான்னுகேட்டேன் , சரி கொஞ்ச நேரம் படுங்க , 
இப்ப வரேன்னு போயிட்டுஒரு , ஒரு மணி நேரம் 
கழிச்சி சுட கஞ்சியோட வந்து குடுத்தாரு ,காலைல
 இருந்து சாப்பிடாம இருந்ததுக்கும் அதுக்கும் , 
அப்பாசும்மா சூப்பரா இருந்துது கஞ்சி , நல்ல 
கட்டு கட்டிட்டு , வெளிலஇருந்த யானை 
சிலைக்கு பக்கத்துல போர்வைய விரிச்சுபடுத்ததுதான் 
தெரியும் , காலைல சூரியன் முகத்துல 
அடிக்கும்போது தான் முழிப்பே வந்துது , 
அப்படி ஒரு தூக்கம் , அப்படி ஒருசுறுசுறுப்பு 
காலைல எந்திரிக்கும் போது , எந்திரிச்சு 
பாத்தாபக்கத்துல பூசாரிய காணோம் . என்னடா
 இது திரும்ப பீதியகிளப்ராறேனு சுத்தி முத்தி பாத்தா ,
 கோயிலுக்கு உள்ள பூசைலஇருந்தாபோல , 
நான் எந்திரிச்சி வரர்த பாத்துட்டு , தம்பி 
அப்படியேஇரு வரேன்னு சொல்லிட்டு 
வெளிய வந்து குளத்துக்கு கூட்டிட்டுபோனா 
போல , நல்ல சூப்பர் குளியல் , குளிச்சிட்டு வந்த 
பிறகு ,பச்சையம்மன் கோயில்ல சாமி கும்பிட்டிட்டு ,
 எல்லாஅய்யனாருக்கும் சூடம் ஏத்தி கும்பிட்டிட்டு 
அப்படியே கில சுத்திவீரபத்திரன் கோயிலுக்கு 
கிளம்பினேன் , பூசாரியும் வழி அனுப்பிவெச்சாரு .

நல்ல புதர்கள் மண்டிய ஒரு சின்ன ஒத்தை அடி
 பாதை , கரடுமுரடா இருந்துது , சுமார் ஒன்று 
அல்லது இரண்டு கிலோமீட்டர்போனோம்னா , 
வலது கை பக்கம் ஒரு பாதை பிரியும் , அந்த 
வழிபோய் முடியற இடம் வீரபத்திரன் கோயில் , 
கொஞ்சம் சின்னகோயில் தான் , ஒடஞ்சு விழறா
 மாதிரி இருக்கும் , இங்க எந்தபூசாரி பீதிய கிளப்ப
 போறார்னு நினைச்சிகிட்டே செருப்ப வெளிலவிட்டுட்டு
 உள்ள நுழைஞ்சா , கொஞ்சம் சடை பிடிச்ச தலையோட
 ,காவி துண்டு மட்டும் கட்டிட்டு , ரொம்ப மெலிஞ்ச
 உடம்போட , கைஎல்லாம் கொஞ்சம் கோணல் மாணலா
 இருந்தாரு பூசாரி , அவர்நம்மள பாத்தா உடனே , நல்லா 
ரொம்ப நாள் பழகனவுங்கள போலவாங்க வாங்க சாமி , 
என்ன மலை ஏறவானு , ரத்னா சுருக்கமாகேட்டாரு , 
ஆமாங்கனு சொன்னேன்வாங்க முதல்ல 
சாமியகும்பிடுவோம்னு சொல்லிட்டு , ஆரத்திய
 காமிச்சாரு , நல்லஅருமையான சாமி , வீராவேசத்தோட
 இருந்தது , அத பாக்கும்போதே நமக்கு ஒரு புது தெம்பே
 வந்துடும் , அவ்ளோ ஒரு வீரம்அந்த சாமிகிட்ட ,
 அதான் வீரபத்திரன்னு பேர் போல , கண்ணுலஆரத்திய
 ஒத்திக்கிட்டு விழுந்து கும்பிட்டிட்டு , வெளிய 
வந்துரெண்டு பேரும் உட்கார்ந்தோம் , நல்ல அமைதியான சூழல் 
 ஆள்அரவம் இல்லாத இடம் , ஓரளவுக்கு மனமும்
 அமைதியாதான்இருந்துது அங்க , கொஞ்சம் போல 
எனக்கும் அந்த சூழல் பிடிக்கஆரம்பிச்சிடிச்சு , அப்படியே 
அவர் கிட்டயும் பேச்சு குடுக்கஆரம்பிச்சேன் , என்னங்க 
எத்தன மணிக்கு எல்லாரும் மலை ஏறஆரம்பிப்பாங்கன்னு 
கேட்டேன் , அவர் என்னது எல்லாரும்னாவேற யாரவது 
உங்க கூட வந்தாங்களானு என்ன திருப்பி கேள்விகேட்டாரு ,
 நான் இல்லை யாரும் வரலைன்னு சொன்னதும் ,சிரிச்சிகிட்டே
 ஓஹோ தம்பி இதுதான் முதல் முறையா வரர்துனுகேட்டுட்டு , 
இந்த ஒருவாரத்துல நீங்க தான் முதல் ஆளு இந்தவரர்து , 
போன வாரம் பௌர்ணமிக்கு நம்ம வேலூர் 
வைத்தியர்வந்துட்டு போனது அவ்ளோதான் 
அதுக்கு அப்பறம் யாரும் வரல ,அதனால ஒன்னும் 
பயப்படாதீங்க , இங்க மாசத்துக்கு பத்து பேர்வந்தா 
பெரிய விஷயம் , வழி எல்லாம் சுலபமாதான் 
தெரியும்தைரியமா போலாம் , மிருக பயம் அவ்வளவா
 இல்லை சூரியன்இருக்கற அப்போ எதுவும் பாதைல 
வராது தைரியமாபோய்ட்டுவாங்கனு சொன்னாரு , 
எனக்கும் அப்போ மிருகத்த பத்திஎல்லாம் ஒன்னும் 
பெருசா பயம் இல்லை , ஏன்னா நேரடி அனுபவம்எதுவும் 
இல்லை , எனக்கு தெரிஞ்ச ஒரே மிருகம் திரு . நாயார்
அவர்கள் மட்டுமே , வழி நிறைய கல்லு இருக்கு , 
வழிலபோறதுக்கு நமக்கு என்ன பயம்னு , அவர் கிட்ட 
அதெல்லாம்ஒன்னும் பிரச்சனை இல்லை ,
 வேற என்ன பாத்து போகணும்னுகேட்டேன் .

அவரும் விளக்க ஆரம்பிச்சாரு , "அப்படியே ஏற 
ஆரம்பிசீங்கன்னா ,வழில உரல் 
பாறைன்னு ஒன்னு வரும் , கொஞ்சம் பெரியமொட்டை
 பாறை அது , சின்ன சின்ன குழிகள் இருக்கும் , 
அதுசித்தர் சாமிகள் மருந்து அரைக்கிற இடம் , 
இப்ப மழை பெய்துஇருக்கறதால அதுல எல்லாம் 
அனேகமா தண்ணி தேங்கிஇருக்கும் , இருந்தா 
நமஷிவாயனு சொல்லிட்டு கொஞ்சம் போலஎடுத்து
 குடிங்க , உடம்புக்கு நல்ல தெம்பு வரும் , அங்க 
இருந்து கடகடனு ஏறிடலாம் மேல , கொஞ்சம் போன 
பிறகு இடது கை பக்கமாஒரு பாத பிரியும் அது மலை 
மேல வரர்துக்கான இன்னொரு வழி ,அதாவது கடலாடி
 வழி , அந்த பக்கம் போகாம நேரா மலை மேலஏறுங்க 
அது போய் முடியற இடம் கடப்பாரை நெட்டு , அதுக்கு 
மேலவழி எங்கயும் பிரியாது , அப்படியே கடப்பாரை 
நெட்டு மேலஏறிநீங்கன்னா அது ஒரு தண்டவாலபடில 
போய் முடியும் , பாத்துநிதானமா ஒருமுறைக்கு
 இருமுறை கவனிச்சு போங்க , சேதாரம்எதாவது 
கண்ணுல பட்டுதுனா போகதீங்க , கீழவிழுந்தா 
எலும்புகூட தேறாது , அதுக்கு அப்பறம் தீட்டு காரி
 மண்டபம் , அங்க தங்கிஆசுவாச படுத்திகிட்டு மேல 
போனீங்கன்ன , பாதாள கிணறும் ,பாப்பாத்தி சுனையும்
 இருக்கும் , அது ஒரு மகா புனிதமான இடம் ,அங்க அந்த 
பெண் தெயவத்த வணங்கி கும்பிட்டிட்டு , பாதாளகிணறுல 
இப்போ தண்ணி மேல இருக்கும்னு நினைக்கிறன் ,தண்ணிய
 ஒரு முடக்கு குடிச்சிட்டு , சித்த சாமிங்களகும்பிட்டுகுங்க , 
ஏன்னா இதுக்குள்ள பல பல விஷயங்கள் , 
பலசக்தி விஷயங்கள் இருக்கு , அதுக்கு மேல
 நான் சொல்லவும்மாட்டேன் , நீங்க அங்க இருந்து 
ஏறிபோங்க , மேல போக போக ,புள்ளையார் நெட்டுன்னு
 ஒன்னு வரும் ரொம்ப குறுகலான பாறை ,அதை தாண்டி 
போனீங்கன்னா , ஆகாய பாதை ரொம்ப சின்ன வழிதான்
 இருக்கும் , பக்கத்துல பிடிமானம் இருக்காது , கரணம் 
தப்பினாமரணம் தான் அங்க , அந்த பாப்பாத்தி தெய்வமே 
இங்ககஷ்டப்பட்டுட்டா , நீங்க பாத்து நிதானமா தான் போகணும்
 , அததாண்டிட்டா மேல உச்சிக்கு போய்டலாம் , 
இப்ப கொஞ்ச மாசமாஅங்க ஒரு துறவி இருக்காரு ,
 அரிசி எல்லாம் பொங்கி சாப்பிடலாம்சாப்பாட்டுக்கு 
பஞ்சம் இல்லை , கொஞ்சம் அப்படி ஏறிஇறங்கிநீங்கன்னா 
கோயில் வந்துடும் , அங்க எல்லாம் ஏகாந்தம்தான் , போய் 
அனுபவிச்சிட்டு வந்து சொல்லுங்கன்னு " , சொல்லிஒரு பெரிய விஷயத்த ரொம்ப சாதாரணமா 
சொன்னாரு . எனக்குகேக்கும் போது நல்லா தான் இருந்துது ,
 ஏன்னா இதுக்கு முன்ன இதமாதிரி த்ரில்லிங் அனுபவம் 
எல்லாம் இல்லை , அதனால நான்நல்ல உற்சாகமாவே
 கிளம்பினேன் , கிளம்பின என்ன கோயிலுக்குபின்னாடி 
பக்கம் கூட்டிட்டு போனாரு , அங்க ஒரு சின்ன குளம்மாதிரி 
இருந்துது , கொஞ்சம் இந்த தண்ணிய குடிச்சிட்டு , 
அதோஅங்க அந்த வழியா போனீங்கன்னா அங்க ஒரு
 சிவலிங்கமும் ,அதுக்கு அப்பறம் ஒரு பெண் தெய்வமும் 
இருக்கும் அதையும்சேவிசிட்டு போங்கன்னு சொல்லி 
திரும்பவும் வீரபத்திரன்கோயிலுக்கு உள்ள போயிட்டாரு , 
நான் அந்த வயசுல விவரம்தெரியாத நேரத்துல ஏதோ
 அதுவும் ஒரு சாமிதானணு போய்தான்கும்பிட்டேன் ,
 பிறகு ஒரு சில வழிகாட்டுதல்கள் கிடச்ச பிறகுதான்
தெரிஞ்சது அது ஒரு ஜீவசமாதி என்பது , நல்லதொரு 
அதீதஅதிர்வலையும் அங்கு சாதாரணமா உணரலாம் 
 யாரவதுபர்வதமலைக்கு போறவங்க படிச்சா இந்த 
இடத்த கண்டிப்பா மிஸ்பண்ணாதீங்க , நல்லதொரு 
அனுபவம் இங்க கிடைக்க வாய்ப்புஇருக்கு....



 பூசாரி வீர பத்திரன் கோயில் 1995 



வீர பத்திரன் கோயில் 1995 



ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து
ஓம் சர்வம் குரு போகர் சரணம்
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-----------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக