
ஓம் குரு போகர் சரணாய நமஸ்து
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து
ஓம் சர்வம் குரு போகர் சரணம்
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
![]() |
1990's |
இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப்
பெருங்கெளசிகனார் பல்குன்றக் கோட்டத்துச்
செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன்,
என்கின்ற ஒரு வள்ளல் , செங்கம் என்கின்ற
ஊரை தலைமையாககொண்டு ஆண்ட அவரின்
ஆட்சிக்குள் வருகிறது தற்பொழுதுபர்வதமலை
என்று சொல்லப்படும் மலை , அவரின்
ஆட்சி காலம்முடிந்து இரண்டாயிரம் வருடங்கள்
ஆகியும் அவர் பேர்சொல்லிக்கொண்டு
இருக்கின்றது
அங்கு இருக்கும் சிறு சிறுஅடையாளங்கள் ,
அவற்றையும் நம் மக்கள் சிறிது சிறிதாக
அழித்தே விட்டார்கள் என்பது ஒரு கிளைக்கதை
. இவரின்காலத்தில் செய்யார் நீர் வளம்
உள்ளதாகவும் அதை ஒட்டிய ஊர்கள்
செழிப்புடையதாகவும் இருந்திருக்கிறது ,
அக்காலம் முதல்கொண்டே இங்கு
சாதாரண பயணம் கூட அசாதரணமாகவே
இருந்திருக்கிறது , பத்துப்பாட்டில்
மலைப்படுகடாம் படித்தால்நன்றாகவே தெரியும்
அந்த இடத்தின் செழிப்பு , வளம் ,
நன்னனின்கொடைத்தன்மை ,
மக்களின் வாழ்க்கை முறை ,
காட்டின் வளம் ,அதன் நெளிவு சுளிவுகள் மற்றும் பல .
இதுவரை நான் சென்று வந்த எல்லா மலைதலங்களுமே
ஏதாவதுஒரு புத்தகத்தின் வாயிலாகவே
எனக்கு தேறிய வந்துள்ளது ,பர்வதமலையும் அப்படிதான் தேறிய வந்தது ,
அதாவது 1990 களில்அருணாசலம் ,
திருவண்ணாமலை கிரி வலம் தான்
நல்லபிரபலமடைஞ்சிட்டு இருந்துது ,
அப்போதான் கிரி வல பாதை போடஅரசு
ஆணை அறிவிச்சி இருந்துது , அதுவரைக்கும்
வெறும் மண்பாதைதான் , பௌர்ணமி
ஆனா நண்பர்கள் சிலருடன் அல்லது
தனித்து கிளம்பிடிவோம் , கொஞ்ச
நாள் கழிச்சி பௌர்ணமிநாட்கள்ல
கூட்டம் அதிகமாக ஆரம்பிச்சது ,
சத்தம் காத பிளக்கஆரம்பிச்சிடிச்சு
,சாதாரண நாட்களிலும் இதே நிலை
தான் ,இன்னும் சொல்ல போன நம்ம காட்டு
சிவா சாமி கோயில்ல கூடநிறைய
வெளிநாட்டுக்காரங்க வர ஆரம்பிச்சிட்டாங்க
( உள்வலத்துல ) .
இந்த சமயத்துல தான்
ஒரு ஆன்மீக மாத
இதழ்ல திரு.நா. மகாலிங்கம் ,
அவர்கள் பர்வத மலை பத்தி எழுதி
இருந்தாரு
,படிச்ச உடனே போகணும்ங்கற ஆவல்
பத்திகிச்சு , படிக்கும் போதேஅவ்ளோ
அழகா இருந்துது அந்த கட்டுரை ,
ஒரு சில இடங்களில்கயிர் எல்லாம்
போட்டு ஏற்றா மாதிரி இருக்கும்னு போட்டுஇருந்தார் ,
சொல்லவா வேணும் ,ஆர்வம் ,
வேட்க்கைனுதான் சொல்லணும் ,
அவ்ளோஅதிகமாய்டுச்சு .
,வழக்கம் போலகிளம்பியாச்சு பர்வதமலைக்கு ,
போகறதுக்கு முன்ன சென்னைலபஸ் ரூட்
எல்லாம் விசாரிச்சி பாத்தா யாருக்கும்
அப்படி ஒரு இடம்இருக்கறதே தெரியல ,
சரி திருவண்ணாமலைக்கு போயிட்டு
விசாரிச்சிகலாம்னு , காலைல பூக்கடை
பஸ் ஸ்டாண்ட்ல பஸ்ஏறியாச்சு
( அப்ப கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் வரல ) , நல்லாஞாபகம் இருக்கு கிட்டத்தட்ட
அஞ்சு மணி நேரம்திருஅண்ணாமலை
போறதுக்கே , ஆறு மணிக்கு கிளம்பிபதினொன்னு
, பதினொன்னரை மணிக்கு
திருவண்ணாமலைபோய் சேந்துச்சு ,
சரி பஸ் ஸ்டாண்ட்ல விசாரிப்போம்னு
,பர்வதமலை எப்படி போறதுன்னு கேட்டா ,
அங்கேயும் யாருக்கும்சரியா ரூட் தெரியல ,
என்னடா இதுனு ரொம்ப கஷ்டமா போச்சு ,
வீட்ல அப்படி இப்படினு அல்வா மேல அல்வா
குடுத்துட்டு வந்தா ,இங்க வழியே தெரியாம
முழிக்க வேண்டியதா போச்சேன்னுநின்னு
அண்ணாமலைக்கு அரோகரா போட்டுட்டு
ஒரு டீ கடைக்குபோயிட்டு , டீ குடிச்சிட்டே
, அந்த டீ மாஸ்டர் கிட்ட விசாரிக்கஆரம்பிச்சேன் ,
அவரு முதல்ல தெரியாதுன்னு சொல்லிட்டாபோல
, அப்பறம் அவரே கேட்டாரு பக்கத்துல
ஏதாவது ஊர் பேர்தெரியுமானு ,
அப்பதான் ஞாபகம் வந்துச்சு நம்ம நா . மகாலிங்கம்
எழுதின கட்டுரை , நல்ல வேலை அத எடுத்துட்டு
வந்திருந்தேன் ,அத எடுத்து , அவர்கிட்ட
படிச்சி காமிச்சேன் , அவரு பாத்துட்டு ,
தென்மஹாதேவமங்கலம்னு எந்த ஊரும்
இல்லை , வேணும்னாதென்மாதிமங்கலம்னு
ஒரு ஊர் இருக்கு அங்க நீங்க சொல்றாமாதிரி
ஒரு மலை இருக்கு , ஆனா ரொம்ப கஷ்டம் ஏற்றது ,
தனியாஎல்லாம் போக முடியாதுனு சொன்னாரு ,
சரி சரி ஊர் போறதுக்குவழிய சொல்லுங்க ,
ஏறிட்டு வந்து நான் சொல்றேன் கஷ்டமாஇல்லையானு
கிண்டலா அவர்கிட்ட சொன்னேன் , அவரும் எந்தரூட் பஸ் எப்படி வழி தெளிவா சொன்னாரு , பஸ் வர
கிட்டத்தட்டமூணு மணி , பஸ் தென்மாதிமங்கலம்
போக அஞ்சு ஆய்டுச்சுசாயந்தர வேல .
ஊர்ல இறங்கி நடந்தா பயங்கர பட்டிக்காடுரெண்டே
ரெண்டு டீ கடை மட்டும் தான் இருந்தது ,
சரி இங்க நமக்குஒரு டீ மாஸ்டர் கிடைக்காமவா
போய்டுவாருனு , திரும்ப ஒரு டீயவாங்கி
குடிச்சிகிட்டே எப்படி வழின்னு கேட்டா
அதோ அந்த வயல்வழியா போனா ஒரு
கோயில் ஒன்னு வரும் அதுக்கு பின்ன
அப்படியே போனா இன்னொரு கோயில்
வரும் இந்த ரெண்டுஇடத்துல யாராவது
இருந்தா அவங்கள கேட்டுட்டு காலைல
மலைஏறுங்க இப்ப சாயங்காலம் ஆகிடிச்சு
போக வேணாம்னுசொன்னாங்க , சரி சொல்றவங்க
சொல்லட்டும் நாம கொஞ்சம்வேகமா
ஏறிடலாம்னு விறு விறுன்னு வயல்
வெளி வழிய ஒத்தைஅடி பாதைல நடக்க
ஆரம்பிச்சேன் , அது போகுது போகுது கிட்டதட்ட
மூணு கிலோமீட்டர் இருக்கும் போல , இருட்டுற
நேரம் ஒருவழியா பச்சையம்மன் கோயில் வந்தாச்சு ,
அந்த சூழ்நிலையேநம்ம மனச அப்படியே கட்டி
போட்டுடுது , அப்படி ஒரு நிசப்த்தம் ,வெறும் காத்து
மட்டும் பயங்கரமா அடிச்சிகிட்டு இருந்துது ,
அதுஇல்லாம அப்படியே ஆள மிரட்டறா
மாதிரி முட்ட முட்டகண்ணோட பயங்கர கதில
ஐயனார் சிலைங்க , கைல டார்ச் லைட்இல்லாததே
இருட்ட ஆரம்பிக்கும் போதுதான் தெரியறது ,
என்னடாஇது சோதனைன்னு அப்படியே எடுத்துட்டு
வந்த துணி மணிஇருக்கிற பையோட
பச்சையம்மன் கோயிலுக்குள்ள போய்
சாமிகும்பிட்டிட்டு திரும்பினா பச்சை கலர்ல
ஒரு உருவம் ரொம்பபக்கத்துல நின்னுட்டு
இருக்கு , ஒருநிமிஷம் அப்படியே தூக்கி வாரிபோட்டுச்சு ........
![]() |
Aiyanaar entrance near pachaiamman temple ( 1995 parvathamalai ) |
![]() |
kulam near to pachaiamman temple( 1995 ) |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக